அர்-றப்பானியா இஸ்லாமிய கற்கைகள் நிறுவகத்தின் ஹதீஸ் கலையில்
பட்டப்படிப்பின் பாடநெறியினை நிறைவு செய்த உலமாக்களுக்கான பட்டமளிப்பு விழா
நேற்று (03) ம் திகதி வெள்ளிக்கிழமை நிந்தவூர் ஜூம்ஆ பெரிய
பள்ளிவாசலில் நடைபெற்றது
மேற்படி நிகழ்வானது அர்-றப்பானியா இஸ்லாமிய கற்கைகள்
நிறுவகத்தினதும், நிந்தவூர் பாதீமா அரபுக் கல்லூரியினதும் அதிபருமான மெளலவி
அல்-ஹாபில் ஏ.ஏ.அலி அஹமட் ரஷாதி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வுக்கு இந்தியாவின் திருச்சி ஜாமியா அன்வருல் உலும் அரபுக்
கல்லூரியின் முதல்வரும், முந்தகப் அல்-ஹதீஸ் தமிழ் மொழிபெயர்ப்பு க்
குழுவின் தலைவருமான மெளலான மெளலவி அல்-ஹாபில், அல்-ஹாரி, றூஹுல் ஹக்
முப்தி, (ரஷாதி, ஹாசிமி) அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஹதிஸ்
கலையில் பட்டப்பின் கல்வி பாடநெறியினை பூர்த்தி செய்த 14 உலமாக்களுக்கான
சான்றிதழ்களையும் பொதிகளையும் வழங்கிவைத்தார்
இன் நிகழ்வின் சிறப்பம்சமாக நிந்தவூரின் இது காலவரை பட்டம்
பெற்றுவந்த 70 மூத்த, இளைய உலமாக்கள், ஹபில்களுக்கான பொதிகளும் வழங்கி
கெளரவிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும். பட்டமளிப்பு விழாவின் போது தலைசிறந்த
உலமாக்களும், அரபுக் கல்லூரிகளின் அதிபர்களும், மற்றும் அதிதிகளும் கலந்து
கொண்டனர்.
Post a Comment