-அபு அலா -
அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர் காரியாலத்திற்கு கீழ் உள்ள சாய்ந்தமருது ஆயுள்வேத
மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண
சுகாதார, சுதேச சிறுவர் நண்ணடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள்,
கிராமிய மின்சார அமைச்சர் ஏல்.எல். முஹம்மட் நசீர் இன்று (15)
தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு
மாகாண அமைச்சரவை கூட்டம் நேற்று வியாழக்கிழமை (14) மாகாண சபையில் கூடியது.
இதன்போது சாய்ந்தமருது ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக
தரமுயர்த்த வேண்டும் என்ற அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில்
சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர் குறித்த மருந்தகத்தை மாவட்ட
வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவையில் அனுமதி
கிடைக்கப்பற்றுள்ளதாகவும் கூறினார்.
Post a Comment