-எம்.ஐ.எம். அஸ்ஹர்-கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆசிரியர் மன்றம் ஒழுங்கு செய்திருந்த கல்லூரி ஆசிரியர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடல் இன்று ( 13 ) கல்லூரி எம்.எஸ்.காரியப்பர் கூட்ட மண்டபத்தில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சகல முஸ்லிம் ஆசிரியர்களும் தமது வீடுகளிலிருந்து கொண்டு வந்த பெருநாள் உணவு பண்டங்களை ஓரிடத்தில் சேகரித்து, கல்லூரியில் கல்வி கற்பிக்கும் தமிழ், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் கல்விசாரா உத்தியோஸ்தர்களும், ஊழியர்களும் ஓன்று கூடி உண்டு மகிழ்ந்து சந்தோசமாக அன்றைய தினத்தை கழித்தனர்.
இனங்களுக்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து வந்த இன முரண்பாடுகள் நீங்கி . ஒரு இனத்தில் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகளை ஏனைய இனத்தவர்களும் புரிந்து கொண்டு பரஸ்பர ஒற்றுமையுடன் வாழ்ந்து ஒரே குடையின் கீழ் நாம் அனைவரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் போல் இலங்கையர் என்ற மகுடத்தின் ஒன்று சேர்ந்துள்ள இச் சந்தந்தர்ப்பம் வரலாற்றில் எவராலும் அழிக்க முடியாது எனவும் மற்றைய சமய கொண்டாட்ட நிகழ்வுகளின் போது ஏனைய சகோதர இன ஆசிரியர்கள் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்து ஏனையவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தெரிவித்தார்.




Post a Comment