Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | கல்முனை கடற்பரப்பிலுள்ள கற்பாறைகளை அகற்றும் பணியை ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ்

-ஹாசிப் யாஸீன், அகமட் எஸ.முகைதீன்-
கல்முனை கடற்கரை பிரதேசத்தில் கற் பாறைகள் காணப்படுவதனால் கரைவலை மீனவர்கள் மீன்பிடிப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இவ்விடயம் சம்பந்தமாக கல்முனை மீனவ சங்க பிரதிநிதிகள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதற்கு தீர்வுகாணும் வகையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நிதி ஒதுக்கீடு செய்து ஆழ்கடல் சுழியோடிகளின் உதவியுடன் அக்கற்பாறைகளை அகற்றி சுத்திகரிப்பு செய்யும் செயற்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வள அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் சுமிந்த விக்கிரமராச்சி, கல்முனை மசூரா சபையின் தலைவர் கரீம் ஹாஜியார் உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இச்சசெயற்திட்டத்திற்கு பிரதி அமைச்சர் 10 லட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget