ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 16வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும், துஆப் பிரார்த்தனையும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனை காரியாலயத்தில் இன்று (16) வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மெஸ்றோ அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.நசீல், மெஸ்றோ அமைப்பின் உயர்பீட உறுப்பினர் ஏ.எம்.றசீன், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, கல்முனை மசூரா குழுவின் செயலாளர் எல்.சர்ஜூன், மசூரா குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை ஜாமியா மன்பயில் ஹிதாயா அறபுக் கல்லூரி மாணவர்களால் மறைந்த தலைவரின் பெயரால் அல்-குர்ஆன் தமாம் செய்யப்பட்டது.
மேலும் மறைந்த தலைவரின் மறுமை வாழ்விக்காக விசேட துஆப் பிரார்த்தனையும் இதன்போது இடம்பெற்றது.

Post a Comment