-ஹாசிப் யாஸீன்-கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதான அபிவிருத்தி பெருவிழாவினை முன்னிட்டு உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் முன்னணி வீரர்களைக் கொண்ட பல வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்த அணிகளான கிழக்கு மாகாண அணிக்கும் வட மாகாண அணிக்குமிடையிலான பலப்பரீட்சை மிக்க உதைப்பந்தாட்ட கண்காட்சிச் சமர் எதிர்வரும் 09ம் திகதி (நாளை) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.04 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டி நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் அகில இலங்கை உதைப்பந்தாட்ட மற்றும் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகள், விளையாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment