-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு
மற்றவர்களின் உள்ளசுத்தி பற்றி சக அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம்
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
எதிர்வரும் 2016-11-13 மற்றும் 2016-11-14
திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா தொடர்பாக
பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு சாய்ந்தமருது பரடைஸ்
வரவேய்பு மண்டபத்தில் 2016-10-30 ஆம் திகதி இடம்பெற்றபோது பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு
பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
என்னுடைய நிலைப்பாடு இதயசுத்தியுடன் இருந்ததா இல்லையா என்பது
தொடர்பில் விளக்கமளிப்பதற்கு அவர் தகுதியுடயவாரா என்ற கேள்வி தன்னிடமுள்ளதாகவும் அரசியல்
காழ்ப்புணர்வு காரணமாக அமைச்சர் பைசர் அவ்வாறானதொரு கருத்தை முன்வைத்துள்ளதாகவும் சாய்ந்தமருது
உள்ளுராட்சிசபை விடயமாக தாங்கள் மூன்று முறைகளுக்கு மேல் சந்தித்துள்ளதாகவும்
இதன்போதெல்லாம் சந்தர்ப்பம் வரும்போது குறித்த பிரகடனத்தை செய்வதாக எங்களிடம்
கூறிவிட்டு இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது அரசியல் காழ்ப்புணர்வுவின் காரணமாகவிருக்கலாம்
என்றும் தெரிவித்தார்.
துறைசார்ந்த அமைச்சர் சகல அதிகாரங்களும் அவரது கையில் இருக்கிறது அவர்
செய்துவிட்டு வந்து பேசியிருந்தால் தான் சந்தோசப்பட்டிருப்பேன் என்றும் இது
விடயாமாக எந்த நடவடிக்கையும் எடுக்காது இங்கு வந்து தன்னை வம்புக்கு இழுத்துவிட்டு
சென்றிருப்பது அவரது பக்குவமில்லாத பண்பைக்காட்டுவதாகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பைசர் முஸ்தபா ஒரு இளம் அமைச்சர் ஆகையால் அவரது கூற்றை தான்
பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை என்றும் அவரதது தகப்பனாரிடத்தில் தான் சட்டம்
பயின்றவன் என்றும் சட்ட உதவியாளராக அவருரிடம் வேலை செய்தவன் என்றும் பைசரின்
குழந்தைப்பருவத்தில் இருந்து கையைப்பிடித்து உல்லாசமாக ஓடித்திரிந்தவன் தற்போது
அரசியலுக்கு வந்ததன் பின்னர் இந்த அன்னியோன்யம் எல்லாம் மறந்து விட்டது போலும் இருந்தாலும்
தான் இந்தவிடயத்தில் அவரை புண்படுத்த விரும்பவில்லை என்றும் இந்த விடயத்தில்
பக்குவம் தவறிவிட்டார் என்ற வேதனை தன்னிடமுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்முனை அபிவிருத்தி தொடர்பாக இங்கு கருத்துத்தெரிவித்த அமைச்சர்
ஹக்கீம், கல்முனை அபிவிருத்தி தொடர்பில் பிரதமர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கல்முனையுடன்
இணைத்து திருகோணமலை கண்டி போன்ற இரண்டுபிரதேசங்களையும் சேர்த்து அபிவிருத்தி
செய்வதற்கான திட்ட வரைபுகளை மேற்கொள்வதற்காக சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிடம்
கையளித்துள்ளதாகவும் கல்முனையுடன் சேர்த்து சம்மாந்துறையும் அபிவிருத்தி
செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். குறித்த அபிவிருத்தித் திட்டத்தை மேற்கொள்வதற்கு
எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும்
தெரிவித்தார்.
ஏகனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் தற்போது கேள்விப்பத்திரம்
கோரப்படும் நிலையில் உள்ளதாகவும் அதில் மிகுந்த வெளிப்படைத்தன்மை இருக்குமென்றும்
குறிப்பாக காணிகளை நிரப்புதல் மற்றும் தோணா அபிவிருத்தி போன்ற வேலைகளை ஆரம்பிப்பதற்கான
ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
2016-11-13 மற்றும் 2016-11-14
திகதிகளில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா நிகழ்வுகள் 2016-11-13
ஆம் திகதி மருதமுனை அல்மனார்
மத்திய கல்லுரியில் ஆய்வரங்கு மற்றும் கவியரங்கு என்பன இடம்பெறவுள்ளதாகவும் 2016-11-14 ஆம்
திகதி அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள்
எழுதிய நான் எனும் நீ கவிதை நூல் மீள் வெளியீடு இடம்பெறவுள்ளதாகவும் அழகிய தொனியில்
அல் குர்ஆன் நிகழ்வும் சிரேஷ்ட ஊடகவியலாளர் நிந்தவூர் சலீம்
கெளரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment