Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | நாட்டில் பசுமை புரட்ச்சியை ஏற்படுத்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு மரக்கன்றுகள் !

-ஏ.எல்..றபீக் பிர்தௌஸ்-
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பசுமைப் புரட்சித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள அரச நிறுவனங்கள், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (17) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் .மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பழமரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி.எம்.எம்.சஃபீர், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன், திட்ட முகாமையாளர் .எல்.றகுமத்துல்லாஹ், கணக்காளர் .எம்.மஃறூப் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்..எம்.மன்சூர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-
 'முழு நாட்டையும் ஒரு பசுமையான நாடாக மாற்றுவதற்கே இவ்வாறான நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருககின்றன. இன்று ஆரோக்கியமாக வாழ்வதென்பது ஒரு சவாலாக மாறியுள்ளது. எல்லோருமே ஆரோக்கியமற்ற ஒரு சூழலை வரவழைத்துக் கொண்டோம். உணவை நஞ்சாக மாற்றிக் கொண்டோம். நிலத்தடி நீரை நாங்கள் நம்பிக் குடிக்க முடியாது. இவ்வாறு மிகக் கஷ்டமான, ஒரு தர்மசங்கடமான, ஆபத்தான ஒரு வாழ்க்கையை நாங்கள் வரவழைத்துக் கொண்டோம். இது நவீன தொழில் நுட்பம், இயந்திரமயமான வாழ்க்கை முறைகள்தான் எமக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவைகளிலிருந்து பாதுகாப்புப் பெறவே நாம் மரங்களை நாட்டி, இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget