Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

Sports | தேசிய விளையாட்டு விழா குன்டு எறிதல் நிகழ்வில் புதிய சாதனை! பிரதி அமைச்சர் ஹரீஸ் வாழ்த்து...!

-யாழ்ப்பாணத்திலிருந்து ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன், எம்.எம்.ஜபீர்-
42வது தேசிய விளையாட்டு விழாவின் 2ம் நாள் நிகழ்வில் குண்டு எறிதல் நிகழ்வில் புதிய இலங்கை சாதனை நிகழ்த்திய மேல் மாகாண வீராங்கனை சாரிகா பெர்ணான்டோவுக்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

42வது தேசிய விளையாட்டு விழாவின் 2ம் நாளான நேற்று (30) வெள்ளிக்கிழமை யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் வழங்கி வைத்தார்.

மேல்; மாகாண வீராங்கனை சாரிகா பெர்ணான்டோ குண்டு எறிதல் நிகழ்வில் 15.25 மீற்றர் தூரம் குண்டு எறிந்து புதிய இலங்கை சாதனை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மேல் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்ட விளையாட்டு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget