
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்கள், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமச்சுக்கு மேலதிக செயலாளராக பதவி உயர்வுக்காக செல்வதையிட்டு சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலினால் "சமூக ஜோதி" என்ற கௌரவ பட்டம் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (25) சாய்ந்தமருது தக்வா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் பொறியியலாளர் எம்.எம்.எம்.சதாத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்ய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி யூ.எல்.எம். காஸீம் அவர்கள் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலினதும், தக்வா ஜும் ஆ பள்ளிவாசலினதும் மரைக்காயர் மார்களான ஏ.எல். அப்துல் றஹீம், ஏ. மன்சூர், யூ.கே. சுபையீர் ஹாஜி, எம்.எம்.எம்.சமூன் ஆகியோரோடு அட்டாளைச்சேனை சர்க்கியா அரபுக் கல்லூரின் பிரதி அதிபரான ஏ.எம். சலீம் சர்க்கி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு விருதினை வழங்கிவைத்தனர்.

Post a Comment