Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அமைச்சு செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் சலீம்!

-ஏ.பி.எம்.அஸ்ஹர்,  அப்துல்  றஹ்மான்-
சாய்ந்தமருது  பிரதேச செயலாளராக கடமையாற்றும்  ஏ.எல்.எம்.சலீம் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சில்  எதிர்வரும் 1ம் திகதி இவர்  உத்தியோகபூர்வமாக தனது  கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

நிர்வாகத்துறையில் சிரேஷ்ட அதிகாரியான இவர் 1995 ஆண்டு நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று கிழக்கு மாகாண  காணி ஆணையாளர் அலுவலகத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றினார்.

அக் காலப்பகுதியில்   குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தில்  உதவி கட்டுப்பாட்டாளராக நீண்ட காலம் கடமையாற்றினார். அத்துடன் உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலுள்ள ஜெனீவா தூதரகம், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு -குடியகல்வு திணைக்களத்திலும்  உதவி கட்டுப்பாட்டாளராகவும் செயற்பட்டார்.

பின்னர் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சில் உதவி செயலாளராக பணியாற்றினார். அரச தகவல் திணைக்கள பிரதிப்பணிப்பாளராக சில காலம் பணிபுரிந்த நேரம் இவர் சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலாளராக நியமனம் பெற்று சுமார் 10 வருடங்கள் கடமையாற்றினார்.

அத்துடன் அக்கரைப்பற்று பிரதேச செயலக்த்திலும் பிரதேச செயலாளராகக் கடமையாற்றியுள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக்களுக்கு பல்வேறு வகையான அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்ளுடன் தொடர்பு கொண்டு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது அல்-ஜலால்,மற்றும் மல்ஹரு ஷம்ஸ் வித்தியாலயங்களிலும் உயர் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியில் கற்ற இவர் ஆசிரியர் சேவை போட்டிப்பரீட்சையில் சித்திபெற்று சாஹிரா  கல்லூரியில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.

ஆசிரியர் சேவையில் இருந்த காலத்தில்  பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டத்தை பூர்த்தி செய்தார். பின்னர் கல்வி நிர்வாகசேவை பரீட்சையில் சித்தி பெற்று இதே கல்லூரியில் பிரதி அதிபராக கடமையாற்றினார். பொது நிர்வாகத்துறை, கலைத்துறை ஆகியவற்றில் முதுமானி பட்டங்களை பெற்றுள்ளார்.

நிர்வாகத்துறை தொடர்பாக   மலேசியா,கொரியா போன்ற  நாடுகளில் பயிற்சிகளையும் பெற்றுள்ளார். இதே வேளை கல்முனைபிராந்தியத்தில் பொது மக்களிடத்தில் இவருக்கு தனியான மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரது சேவை மென்மேலும் சிறக்க கலசம்.கொம் இணைத்து அன்பான வாழ்த்துக்கள்.

https://www.facebook.com/kalasemnet/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget