-ஹாசிப் யாஸீன்-சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பதவி உயர்வு பெற்று சட்டம்இ ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டதையிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து அன்னாரின் சேவையினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தலைமைக் காரியாலய சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சமுர்த்தி இணைப்பாளர்,.அலியார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், கணக்காளர் எம்.எம்.உசைனா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான், உதவி முகாமையாளர்களான றியாத் ஏ.மஜீத், எம்.எம்.எம்.முபாறக், எம்.யூ.ஹில்மி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மன்றத்தின் தலைவர் யூ.எல்.ஜஃபர் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் சலீமின் 9 வருட கால அர்ப்பணிப்புடனான தங்கமான சேவையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக உத்தியோகத்தர்களால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் தங்கப் பதக்கம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.



Post a Comment