-ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்கும் எக்ஸெஸ் துபாய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் வாஹிட் பொடுஹிக்குமிடையிலான சந்திப்பு நேற்று (23) புதன்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் விஷேடமாக மின்வலு, மின்சார உற்பத்தி துறைகளிலும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு அபிவிருத்திற்கு அனுசரணை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
இச்சந்திப்பில் மௌலவி ஏ.எம். நஸீரும் கலந்து கொண்டார்.
Post a Comment