
சாய்ந்தமருது
உதவும் கரங்கள் நலன்புரி அமைப்பு ஒழுங்கு செய்திருந்த சம்மாந்துறை வீரமுனை சீர்பாததேவி
சிறுவர் இல்ல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை
அமைப்பின் தலைவர் எஸ்.ரீ.யாஸிர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் பிரதம
அதிதியாகவும் சாய்ந்தமருது பெமிலி சொய்ஸ் நிறுவன
முகாமையாளர் எம்.ஐ.ஏ.மன்சூர் கல்முனை ஹபீப்
வங்கி முகாமையாளர் ஏ.எல்.அன்வர்தீன் சாய்ந்தமருது
கோட்ட சுற்றாடல் ஆணையாளரும் ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் சாய்ந்தமருது
சிங்கர் ஸ்ரீலங்கா முகாமையாளர் எஸ்.எச்.ஜிப்ரி சம்மாந்துறை பொலிஸ் நிலைய
பொலிஸ் பரிசோதகரும் சிறுகுற்றப்
பொறுப்பதிகாரியுமான எம்.எம்.அஸ்றப் சீர்பாததேவி
சிறுவர் இல்ல பணிப்பாளர் பொறியியலாளர் ரீ.வினாயகமூர்த்தி சீர்பாததேவி
சிறுவர் இல்ல
தலைவர் எஸ்.மகேஸ்வரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இனங்களு்கிடையில்
பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த நிகழ்வு
அப்பிரதேச தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.

Post a Comment