சாய்ந்தமருது கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த ‘கிங்
ஹோஸஸ் வெற்றிக்கிண்ண’ அணிக்கு 7 பேர்கள் விளையாடும், 5 ஓவர்களைக் கொண்ட கிறிக்கட்
சுற்றுப்போட்டியை கடந்த 7 நாட்களாக 48 விளையாட்டுக்கழகங்களிடையே சாய்ந்தமருது பௌஸி விளையாட்டு மைதானத்தில் மின்னொளியில்
இரவு போட்டிகளாக நடைபெற்றது.
போட்டியின் இறுதிநாளான நேற்று (25) இரண்டு அரை இறுதி போட்டிகளும், இறுதிப்போட்டியும் இடம்பெற்றது.
முதல் அரை இறுதிப் போட்டி சாய்ந்தமருது டஸ்கஸ் விளையாட்டுக்கழகத்துக்கும்
அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகத்துக்கும் இடையில் இடம்பெற்றது. இதில் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
இரண்டாம் அரை இறுதிப் போட்டி சாய்ந்தமருது லம்கோ
விளையாட்டுக்கழகத்துக்கும் மாவடிப்பள்ளி விளையாட்டுக்கழகத்துக்கு இடையில் நடைபெற்றது இப்போட்டியில் சாய்ந்தமருது லம்கோ விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அந்த அடிப்படையில் அக்கரைப்பற்று நோநேம் விளையாட்டுக்கழகமும் சாய்ந்தமருது
லம்கோ விளையாட்டுக்கழகமும் இறுதிப்போட்டிக்கு களமிறங்கின.
இவ்விரு அணிகளும் கடைசிவரை
விறுவிறுப்பான முறையில் விளையாடி இறுதியில் அக்கரைப்பற்று நோநேம்
விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.எல் முஹம்மட் தலைமையில்
நடைபெற்ற இறுதி நிகழ்வில் பொலிஸ் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஏ.எம்.நவாஸ்
பிரதம அதிதியாகவும் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் தொழிலதிபர் எம்.பஸ்மிர் ஆகியோர்
கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டதுடன் இன்னும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றிகொண்ட கழகங்களுக்கு கிண்ணங்களும் பணப்பரிசில்களும்
வழங்கப்பட்டதுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மின்னொளியில் இடம்பெற்ற இப்போட்டிகளை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான
ரசிகர்கள் குழுமியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
Post a Comment