சாய்ந்தமருது
ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்தின் இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு
ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு ஒஸ்மானியன் விளையாட்டுக் கழகத்தின்
முகாமையாளர் ஏ.எல்.பாஹிம் தலைமையில் சாய்ந்தமது றியாழுல் ஜன்னா பாடசாலை
மண்டபத்தில் இன்று (10) சனிக்கிழமை இடம்பெற்றது.
விசேட மார்க்க சொற்பொழிவை கல்முனை மஸ்ஜிதுல் வத்திரியின் பள்ளிவசலின் பிரதம இமாம் மௌலவி ஏ.ஏ.எம்.ஜப்றான் நிகழ்த்தினார்.
இதில்
ஈகள் வேல்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், ஒஸ்மானியன்
விளையாட்டுக் கழகத்தின் தவிசாளர் எம்.எம்.முஹம்மட் அறபாத், ஒஸ்மானியன்
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.வை.எம்.அறபாத், தொழில் அதிபர்கள்,
விளையாட்டுக் கழக பிரதிநிகள், வர்த்தகர்கள், கல்விமான்கள், இளைஞர்கள்
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஒஸ்மானியன் விளையாட்டுக்
கழகத்தினால் சாய்ந்தமது றியாழுல் ஜன்னா வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி
இயந்திரம் மற்றும் ஒரு தொகை மின் விளக்குகள் என்பவற்றை ஒஸ்மானியன்
விளையாட்டுக் கழக நிர்வாகத்தினரால் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீனிடம்
கையளிக்கப்பட்டது.
Post a Comment