ஸ்ரீ
லங்கா கராத்தே சம்மேளனத்தின் தேசிய கராத்தே போட்டிக்கு வீரர்களை தெரிவு செய்வதற்கான கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப் போட்டியானது கிழக்கு மாகான கராத்தே சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஆர்.முகம்மத்
இக்பால் தலைமையில் கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில்
கிழக்கு மாகாணத்தின், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களின் வீரர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொலீஸ் முப்படையினர்களும் பங்குபற்றினார்கள்.
இதில்
சம்மேளன தலைவர் முகம்மத் இக்பால் அவர்களிடம் பயிற்சி பெற்ற ஏராளமான மாணவர்கள் இக் கராத்தே போட்டியில் கலந்துகொண்டார்கள்.
அதில்
கல்விதுறை சார்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழகம் 9 தங்கமும், 9 வெள்ளியும், 1௦ வெண்கலமும், கல்முனை
சாஹிரா தேசியக் கல்லூரி 2 தங்கமும், 5 வெள்ளியும், 1 வெண்கலமும், கல்முனை அல் மிஸ்பா மகா வித்தியாலயம் 2 வெள்ளியும், 1 வெண்கலமும் என மொத்தமாக தங்கப்
பதக்கங்கள் 11, வெள்ளி பதக்கங்கள் 16, வெண்கலப் பதக்கங்கள் 12 என மொத்தமாக 39 பதக்கங்கள்
பெற்றுகொண்டார்கள்.
இது
6 தொடக்கம் 13 வயது வரைக்குமான சப்
ஜுனியர் , 14/15 வயது கெடற் பிரிவு, 16/17 வயது ஜுனியர் , 18 - 20 வயதுடைய 21 வயதுடைய
பிரிவு, மற்றும் 21 வயதுக்கு மேற்பட்ட சீனியர் ஆகிய
பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
தேசிய
கராத்தே போட்டியானது எதிர்வரும் 27,28 /10/ 2017
இல் 17வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கும், மற்றும் நவம்பரில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது
Post a Comment