உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கிராமிய
பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 55 இலட்சம் ரூபா
நிதி ஒதுக்கீட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அம்பாரை 1ஆம் வீதி
கொங்கீறீட் வீதியாக செப்பனிடும் வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கிதிர் முஹம்மட்
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியின் அபிவிருத்தி பணிகளை
ஆரம்பித்து வைத்தார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்
எம்.எம்.முஸ்தபா, சம்மாந்துறை
மக்கள் மன்ற தலைவர் கே.எல்.யூசுப்,
மலங்கு மஸ்தார் முதியோர் சங்க தலைவர் எம்.ஐ.இப்றாகீம், மகளிர் சங்க
பிரதிநிகள், பிரதேச
சபை உத்தியோகத்தர்கள், பிரதேச
சமூக தொன்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள்,
பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக இவ்வீதி அபிவிருத்தி செய்யப்படாமல் குன்றும்
குழியுமாக காணப்பட்டதனை பிரதேச பொது மக்கள் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஐ.எல்.எம்.மாஹிரின் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்த அவர் மேற்கொண்ட அயராத
முயற்சியின் பயனாக இவ்வீதி உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர்
முஸ்தபாவின் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment