தேசிய ரீதியில் 2017 ஆம் ஆண்டுக்கான 'தேசிய நீலப் பசுமை ஜனாதிபதி விருது வழங்கும்
நிகழ்வில் இரண்டாமிடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் 2016 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண உற்பத்தித்
திறன் விருது வழங்கும் நிகழ்வில் முதலாமிடத்தையும் பெற்று கிழக்கு மாகாண சுகாதாரத்
துறைக்குப் பெருமையைச் சேர்த்த நிந்தவூர் ஆதார வைத்தியசாலை
உத்தியோகத்தர்கள்மற்றும் ஊழியர்களை
பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நிந்தவூர் ஆதார
வைத்தியசாலைக் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
வைத்தியசாலை
அபிவிருத்திக் குழுத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.நசீர் அஹமட்
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு, சாதனையாளர்களைப் பாராட்டி கௌரவித்தார்.
மேலும்
இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன், பிரதி பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.இஸ்ஸதீன் உள்ளிட்ட சுகாதார சேவை உயரதிகாரிகள் பலரும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்வைத்தியசாலைக்கு
2011ம் ஆண்டிலும் உற்பத்தித் திறன் முதலாமிட
விருதொன்று கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மொத்தம் மூன்று விருதுகளும் கிடைக்கக்
காரணமாகவிருந்து உழைத்த வைத்திய அத்தியட்சகர் டாக்டர் திருமதி.சக்கிலா இஸ்ஸதீன், ஏனைய
வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், குடும்பநல
உத்தியோகத்தர்கள், ஏனைய பணியாட்கள் அனைவருக்கும் பிரதியமைச்சரால்
சான்றிதழ், நினைவுச் சின்னம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை வைத்திய
அத்தியட்சகர் டாக்டர் திருமதி.சக்கிலா இஸ்ஸதீனின் தன்னலங்கருதாச் சேவையைப்
பாராட்டி வைத்தியசாலை உத்தியோகத்தர்களும், அபிவிருத்தி
குழுவினரும், பிரதியமைச்சர் பைசால் காசீமும் பொன்னாடை போற்றி, நினைவுச்
சின்னங்களும் வழங்கி கௌரவித்தனர்






Post a Comment