சாய்ந்தமருது
பிரதேசத்தின் முதுசம்களான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 38 வது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டு வீர்ர்கள் ஸ்தாபக அங்கத்தவர் கௌரவிப்பு புதிய கிறிக்கட் சீருடை அறிமுகம் வருடாந்த பொதுக்கூட்டம் என்பன அண்மையில் சாய்ந்தமருது ஸீபிரீஸ் ரெஸ்ட்ரோரண்டில் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.மஸுத் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது
பெமிலி சொய்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எச்.எம்.நௌபர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதுடன் கழகத்திற்கான விளையாட்டு சீருடைகளை அன்பளிப்பு செய்து அறிமுகமும் செய்து வைத்தார். இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின் கூட்டு பணிப்பாளர் யு.எல்.எம்.சாஜித் அவர்களின் பணிப்புரையின் பேரில் செயற்பாட்டுமுகாமையாளர் முஹம்மட் இம்தாத் மற்றும் உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.சப்கி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரேவ்
லீடர்ஸ் விளையாட்டு கழகத்தின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு வழங்கிய கழக உறுப்பினர்கள் மற்றும் ஸ்தாபக உறுப்பினர்களும் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.










Post a Comment