வக்பு
சபையினால் அண்மையில் கலைக்கப்பட்ட மாளிகைக்காடு – சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் வக்பு சபையின் உயர்நீதிமன்றமான தீர்ப்பாயத்திற்கு( Tribunal ) செய்த முறைப்பாட்டினை தொடர்ந்து தீர்ப்பாயம் ஏற்கனவே இருந்து வந்த சாய்ந்தமருது
ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையே தொடந்தும் செயலாற்ற வேண்டும் என கடந்த சனிக்கிழமை ( 27 ) வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து சாய்ந்தமருது
ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா உள்ளிட்ட ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்
சபை உறுப்பினர்கள் பொதுமக்களால் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் வரவேற்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை பெறுவதற்கு உதவி புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
செலுத்தும் வகையில் விசேட தொழுகையும் துவாப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.






Post a Comment