இன வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கண்டி மற்றும் ஏனைய பகுதி மக்களுக்காக சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை ஒன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் நேற்று (06) ஒன்று கூடிய ஊர் மக்கள்,
வன்முறைகளால் பாதிக்கப்கப்பட்ட திகன, தெல்தெனிய உள்ளிட்ட முஸ்லிம்
மக்களுக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர்.
முஸ்லிம்களுக்கு
எதிராக கடந்த திங்கட்கிழமை மத்திய மாகாணத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட
பகுதிகளில் சிங்களக் காடையர்கள் மேற்கொண்ட இனவாதத் தாக்குதல்களுக்கு
எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் பகுதிகளில் நேற்று (06)
செவ்வாய்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




Post a Comment