-கண்டியிலிருந்து முஸ்தாக்-
தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள் வினியோக்த்தை அரசு நிறுத்தியுள்ள நிலையில், சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக கண்டிப் பிரதேசத்தில் உள்ள 10 க்கு மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்திச் சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 8000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில், அரசு உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு இந்த தொழிற்சாலைகளை மீழ இயங்குவதற்கான நடவடிக்கைகளை மிக விரைவில் மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் இன்று (17) கண்டி நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன், நகரமத்தியிலிருந்து பேரணியாக மாவட்ட செலகம் வரை சென்று மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
Post a Comment