சர்வதேச
சதுரங்க தினத்தையொட்டி ஸஹிரியன் நைட்ஸ் செஸ் ( சதுரங்கம்)கழகம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த செஸ் சம்பியன்சிப் போட்டிகள் அண்மையில்
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்த இளம் சிரார்கள் மத்தியில் சதுரங்க
விளையாட்டினை அறிமுகப்படுத்தி சர்வதேச தரத்தில் போட்டிகள் மற்றும் பயிற்சிகளை வழங் கும் நோக்கில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஆறு தொடக்கம்
பதினொரு வயது மாணவர்களையும் பன்னிரண்டு தொடக்கம் பதினாறு வயது மாணவர்களையும் இருதரப்பினராக
பிரித்து போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு இச்சுற்றுப் போட்டி இடம்பெற்றது.
பங்குபற்றிய
அனைத்து மாணவர்களையும் மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
50க்கும்
மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கமும் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி அதிபர் எம்.எஸ். முஹம்மட் அவர்களினால் வழங்கி
கௌரவிக்கப்பட்டது.
சிறப்பு
அதிதிகளாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ.அஸீஸ்
, கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஏ.சலாம் மற்றும்
டிஎம்கே அஸோசியேட்ஸ் தலைவவர் கலீல்
எஸ் முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ரஷ்யாவின்
கேர்ஸ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவரும் ஸஹிரியன் நைட்ஸ் செஸ் கழகத்தின் தலைவருமான முஹம்மட் அஸ்ஜத் அவர்களின் தலைமையில் இடம்பெற் நிகழ்வில் அமைப்பின் அங்கத்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்
Post a Comment