இனங்களுக்கிடையில்
பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை
, களுவாஞ்சிகுடியில் இன்று இப்பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரிய ஆசிரிகைகளும்
, கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் இணைந்து புனித நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
பாடசாலை அதிபர்
கே.தம்பிராஜா தலைமையில் சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற
மேற்படி நிகழ்வில் இப்பாடசாலையில் கற்பிக்கும் இந்து , இஸ்லாமிய , கிருஸ்தவ , கத்தோலிக்க
மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் கலந்து
கொண்டனர்.
Post a Comment