கடற்றொழில்
நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் சாய்ந்தமருது
முகத்துவார இறங்குதுறை வீதிகளுக்கு கொங்கிறீட் இடும் வேலைத்திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ( 27 )ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடற்றொழில்
நீரியல் வளத்துறை திணைக்கள மாவட்ட உதவிப் பணிப்பாளர் சுமிந்த பிரபா விக்கிரமாராச்சி
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடற்றொழில் நீரியல்
வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிரதம அதிதியாக
கலந்து கொண்டு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில்
இராஜங்க அமைச்சர் சிறியானி விஜயவிக்கிரம, காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.எச்.ஜமால், கடற்றொழில்
நீரியல் வளத்துறை திணைக்கள உயர் அதிகாரிகள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள்,
மீனவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை மீனவர்களுக்கான
பாதுகாப்பு அங்கிகள் மானியமாக வழங்கும் வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.
Post a Comment