சாய்ந்தமருது
– மாளிகைக்காடு உலமா சபை சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்த சாய்ந்தமருது , மாளிகைக்காடு பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பது சம்பந்தமான கலந்துரையாடலொன்று கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது
– மாளிகைக்காடு உலமா சபை தலைவரும் , அட்டாளைச்சேனை அரபிக் கல்லுரி விரிவுரையாளருமான மௌலவி எம்.எம்.எம்.சலீம் ( சர்கி ) தலைமையில் இடம்பெற்ற மேறபடி நிகழ்வில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் வை.எம்.ஹனீபா
, கல்முனை அல்ஹாமியா அரபிக்கல்லூரி பிரதி அதிபர் ஏம்.எஸ்.எம்.நபார் மௌலவி , சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை மருத்துவ அதிகாரி டொக்டர் சனூஸ் காரியப்பர் , கல்முனை பிராந்திய சுகாதார தொற்றுநோய் பொறுப்பதிகாரி டொக்டர் என்.ஆரிப் , சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத் , சட்டத்தரணி என்.எம்.முஜீப் , கிராம சேவை உத்தியோஸ்தர் எல்.நாஸர் , கல்முனை பொலிஸ் நிலைய சமூக சேவை பொலிஸ் அதிகாரி ஏ.எல்.ஏ.வாஹித் , உணவு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.தஸ்தகீர் , பொது சுகாதார பரிசோதகர்கள் , பாடசாலை அதிபர்கள் , சமூகசேவை அமைப்பின் பிரதிநிதிகள் , பிரதேச வர்த்தகர்கள் , விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு உலமா சபை உறுப்பினர்கள் , சாய்ந்தமருது பிரதேச செயலக பொருளாதார , சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோரகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது
– மாளிகைக்காடு பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்கள் , மீனவர்கள் , விவசாயிகள் போன்றோர் போதைப்பொருள் மற்றும் புகைத்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு உள்ளாகி வருவது அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதனால் எதிர்காலத்தில் இளம் சந்ததியினரை இப்போதைப் பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்வோர் மத்தியிலும் பாவனையில் ஈடுபடுவோர் மத்தியிலும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது சம்பந்தமாகவும் இக் கலந்துரையாடலின் போது விரிவாக ஆராயப்பட்டது.
பாடசாலைகளுக்கு
அண்மையிலுள்ள கடைகள் , ஹோட்டல்கள் என்பவற்றின் உரிமையாளர்கள் , சாய்ந்தமருது பிரதேசத்தில் புகைத்தல் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் , போதைப்பொருள் விற்பனை செய்வோர் மற்றும்
அவர்களுக்கு உடந்தையாக இருப்போர் , போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ அழைத்து பொதுவான ஒரு இடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் , பாடசாலை மாணவர்களாயின் அவர்களின் பெற்றோருடன் தொடர்பு கொண்டு அந்த விடயத்தை கையாளுதல் , கல்விப் பொதுத்தராதர சாதாரண உயர்தர மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் பாடசாலை அதிபர் மற்றும் ஒழுக்காற்று குழு ஆசிரியர்கள் மூலமாக போதைப்பொருளன் தாக்கம்பற்றிய கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல் போன்ற முடிவுகள் இக்கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது. அத்துடன் இப்போதை ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கென துறைசார் குழுவொன்றும் ஏற்படுத்தப்பட்டது
Post a Comment