Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா!

-யூ. கே. காலித்தீன்-

வருடாந்த பரிசளிப்பு விழாசாய்ந்தமருது ரியாலுல்ஜன்னா வித்தியாலத்தின்கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (28) பாடசாலை அதிபர்எம்.ஐ.சம்சுதீன் தலைமையில்நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்கு கல்முனைவலயக் கல்விப் பணிப்பாளர்எம்.எஸ். ஜலீல் பிரதமஅதிதியாக கலந்துகொண்டதோடு,பிரதிக் கல்விப் பணிப்பாளர்ஏ.எல்.எம். முக்தார் கௌரவஅதிதியாகவும் விஷேடஅதிதிகளாக சாய்ந்தமருதுகோட்டக் கல்விப் பணிப்பாளர்ஏ.பி பாத்திமா நஸ்மியா,இலங்கை மின்சார சபையின்கல்முனை மின் அத்தியட்சகர்எஸ்.எம்.ஏ.அக்பர் அலி, விஷேட தேவையுடைய ஆசிரிய மாணவர்களுக்கான வலவாளர் திருமதி ஸியோனி ஆகியோருடன் பாடசாலைபிரதி அதிபர், ஆசிரியர்கள்மற்றும் கல்வி அதிகாரிகள்பெற்றோர் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

விழா முடிவில் 2018 ஆண்டு இணைப்பாடவிதான போட்டிகளான தமிழ் மொழிதினப் போட்டியில் பாவோதல், பேச்சுப் போட்டி, இசையும் அசைவும் போட்டிகளிலும், ஆங்கில மொழிதினப் போட்டியான கொப்பி றைட்டிங், கலாசாரப் போட்டி, அழகியல் போட்டி, கட்டுரை ஆகிய போட்டிகளில் வலய மற்றும் கோட்ட மட்டத்தில் பங்கபற்றி வெற்றிகைளைஈட்டி பாடசாலைக்கும் கோட்டத்திற்கும் பெருமையைச் சேர்த்த மாணவர்கள், 2016, 2017 மற்றும் 2018 ம் ஆண்டுகளில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் இவ்வருடம் 3ம் தவணைப் பரீட்சையில் வகுப்பு ரீதியாக முறைய 1ஆம், 2ஆம் மற்றும் மூன்றாம் நிலைகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கும், கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி குழுவினாலும் மற்றும் பெற்றோர்களினாலும் நினைவுச் சின்னங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget