இலங்கை சதுரங்க சம்மேளனமும் ஸஹிரியன் நைட்ஸ் சதுரங்க கழகமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக ஒழுங்கு செய்திருந்த அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான சுவிஸ் முறையிலான 5 சுற்றுக்களைக் கொண்ட சதுரங்க சம்பியன்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனும் அப் பல்கலைக் கழகத்தின் சதுரங்க விளையாட்டு குழு தலைவருமாகிய கே.என்.எம்.நிஸால் பெரேரா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
7 , 9 , 11 , 13 , 15 , 17 வயதிற்குட்ட ஆண் பெண் இருபாலாருக்குமிடையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் ஜனாபா ஏ.பி.நிஸ்மியா சனூஸ் பிரதம அதிதியாகவும் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஐ.சம்சுதீன் , அம்பாறை மாவட்ட கிறிக்கட் பயிற்றுவிப்பாளர் எம்.பீ.எம்.றஜாயி , கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஏ.சலாம் , பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் , சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரும் அம்பாறை மாவட்ட சதுரங்க விளையாட்டுக்கான ஒருங்கிணைப்பாளருமான ஏ.எம்.ஸாகிர் அஹமட் , ஸஹிரியன் நைட்ஸ் சதுரங்க கழக உறுப்பினர்களான ஏ.எம்.றோஸான் , எஸ்.எல்.எம்.சுஹுதான் , எம்.எம்.ஏ.ஹய்ஸான் , எம்.ஜெஹீன் , என்.எம்.ஏ.றுஸ்லி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தங்கம் , வெள்ளி , வெண்கலப்பதக்கங்களும் பெறுமதியான சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
இச்சுற்றுப் போட்யில் வெற்றிபெற்ற மாணவர்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் இடம்பெறவுள்ள சதுரங்க போட்டி நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பெறவுள்ளதாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனும் அப் பல்கலைக் கழகத்தின் சதுரங்க விளையாட்டு குழு தலைவருமாகிய கே.என்.எம்.நிஸால் பெரேரா தெரிவித்தார்.
Post a Comment