காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் விடுத்த வேண்டுகோளின் பேரில் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயம் மற்றும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றிற்கு கழிவுத்தொட்டிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிரில் , உதவி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் , பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.பஸ்மீர் , எம்.எச்.எம்.இஸ்மாயில் ஆகியோர் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நழீர் மற்றும் மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி ஆகியோரிடம் கழிவுத்தொட்டிகளை வழங்கி வைத்தனர்.
Post a Comment