Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

2018 இல் முதல் கடற்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது டைட்டானிக் II

பனிப்பாறையில் மோதி 104 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் மறு வடிவமாக உருவாக்கப்பட்டு வரும் கப்பல், 2018 ஆம் ஆண்டளவில் தனது கடற்பயணத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் சவுத்தாம்டனிலிருந்து தனது முதற்பயணத்தைத் தொடங்கிய மிகப்பெரும் கப்பலான டைட்டானிக், 1912ஆம் ஆண்டு 2224 பயணிகளுடன் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.

இதன்போது, கப்பலில் இருந்த பயணிகள், மாலுமிகள், ஊழியர்கள் என 1500 பேர் வரையில் உயிரிழந்தனர். ஏனையவர்கள் கப்பலில் இருந்த உயிர்காக்கும் மிதவைகள் மூலம் தப்பியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், உயிர் பிழைத்தவர்களிடம் தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையில் டை்டானிக் – II (Titanic II) எனும் கப்பல் உருவாக்கப்பட்டு வருகின்றது.

மூழ்கிய டை்டானிக் போலன்றி, இதில் போதிய உயிர் காக்கும் படகுகளும் மிதவைகளும் பொருத்தப்படும் என, இந்தக் கப்பலை உருவாக்கி வரும் அவுஸ்திரேலியாவின் ப்ளுஸ்டார் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூழ்கிய கப்பலைப் போன்றே இதிலும் 9 அடுக்குகள் இருக்கும் எனவும் 840 கேபின்களுடன் 2,400 பயணிகளும், 900 கப்பல் ஊழியர்களும் தங்கும் வகையில் உருவாக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கப்பலில் நீச்சல் குளம், டர்கி பாத் எனப்படும் நீராவிக் குளியல், மசாஜ், ஜிம் வசதிகளும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவிலுள்ள ஜியாங் சூ என்ற இடத்தில் இருந்து துபாய் நோக்கி இந்தக் கப்பல் தனது முதல் பயணத்தை 2018 இல் ஆரம்பிக்கும் என நம்பப்படுகிறது.
Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget