Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தக்வா மையவாடிக்கு ஒளியூட்டப்பட்டது


-யூ.கே.காலித்தீன்-

சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியில் அமைந்துள்ள தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடி நீண்ட நாட்களாக இருளில் மூழ்கிக் காணப்பட்டது.



இதன் மின்குமிழ் பராமரிப்பு வேலைகளை கல்முனை மாநகரசபை மேற்கொண்டு வந்திருந்தும், கடந்த சிலகாலமாக இதன் பராமரிப்பு பணிகள் இடம்பெறவில்லை. இதனால் இரவு வேளைகளில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டு வந்தது.



இது தொடர்பாக மாநகரசபை உறுப்பினர்களை தொடர்புகொண்டபோது, இதற்கான நிதி ஒதுக்கீடு இன்மை காரணமாக இதனை பராமரிக்க முடியவில்லை எனத் தெரிவித்தனர்.



இதன் காரணத்தால் தக்வா ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான நிதியில் இருந்து மின்குமிழ்கள் கொள்வனவு செய்யப்பட்டு, மாநகரசபை ஊழியர்களின் உதவியுடன் ஒளியூட்டப்பட்டது.



 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget