-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
எதிர் வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடை பெறவுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக நேற்று ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் ஏ.எல்.அப்துர்ரஊப் வழங்கியுள்ள விளக்கம்.
உபவேந்தர், பீடாதிபதிகள், பதிவாளர், துறைத் தலைவர்கள், நிதியாளர், தொழிச்சங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரைக் கொண்ட தென்கிழக்குப்பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாக்குழு, பலதடைவைகள் ஓன்று கூடி மேற்கொண்ட ஆழமான முறையிலான கலந்துறையாடலின் அடிப்படையில் பின்வரும் நியாயமான காரணங்களினால் பட்டமளிப்புவிழாவினை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடாத்துவது எனதீர்மானித்துள்ளது.
1) பட்டமளிப்பு விழா போன்ற ஒரு பெரும் நிகழ்வினை நடாத்துவதற்கு ஏதுவான கட்டடம் தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் கணப்படாமை.
2)பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்காக உத்தேசித்த மண்டபம் பெரிதும் தகரத்திலான அடைக்கப்பட்ட இடம்என்பதால் அதன் உஷ்னத்தை விழாவில் கலந்துகொள்ளும் விருந்தினர்களும் பட்டதாரிகளும் சகிக்கமுடியாதுள்ளமை
3) மேற்சொன்னஇடத்தில் பரீட்சை நடாத்துவதைக் கூட மாணவர்கள் ஆட்சேபனைதெரிவித்து, இங்கு பரீட்சைகளை நடாத்தவேண்டாம் என நிர்வாகத்தினருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளனர் என்பதையும் கவத்திற் கொண்டமை.
4) இந்த இடத்தினை ஓரளவேனும் உகந்ததாக அமைத்துக் கொள்ள ஏற்படும் செலவானது 200 இலட்சங்களையும் தாண்டிவிடக்கூடும் என வேலைப்பொறியியலாளர் பகுதிமதிப்பிட்டள்ளது. இது பட்டமளிப்புவிழா வினை கொழும்பில் நடாத்துவதற்கு தேவையான செலவினைவிட பண்மடங்கு அதிகமானதாக உள்ளமை.
5) மேற்சென்ன இடமானது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது என்பதுடன் அந்தஅனர்தத்துக்கு இலகுவில் உட்படக்கூடிய கழியோடை ஆற்றுக்கு அருகாமையிலும் பொருத்தமற்ற இடத்திலும்; அமையப்பெற்றுள்ளமை.
6) குவைத் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுமார் 1500 மில்லியன் ரூபாசெலவில் 1400 இருக்கைகளைக் கொண்ட விழா மண்டபம் நவீன முறையில் நிர்மாணத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விடத்தை மீளமைக்கும் செலவு பணவிரயமாகவும் பயனற்றதாகவும் அமைந்துவிடும் எனக் கண்டறிந்தமை.
7) இம்முறை இரண்டுகல்வியாண்டுகளைச் சேர்ந்த இரு தொகுதி பட்டதாரிகளை ஒன்றிணைத்து பட்டமளிப்புவிழாவை ஏற்பாடு செய்து விழாச் செலவினை கனிசமாகக் குறைக்கவும் விழாக் குழு முடிவெடுத்துள்ளது.
தலைவர்
பட்டமளிப்பு விழாக் குழு

Post a Comment