Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியால் பள்ளிவாசல்கள், பாடசாலைகள்களுக்கு நிதி உதவி!


-ஹாசிப் யாஸீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முயற்சியினால் டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான ஷெய்க் நாசிம் அஹம்மட் அவர்களினால் நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள், பாடசாலைகள், சுகாதார மத்திய நிலையங்களுக்கு குடிநீர் இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கு நிதிகள் கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.

சவளக்கடை பிரதேசத்தில் 6ம் கிராம பெரிய குளம் ஜூம்ஆப் பள்ளிவாசல், 5ம் கிராம ஸபூரியா ஜூம்ஆப் பள்ளிவாசல், வீரத்திடல் மபாஸா ஜூம்ஆப் பள்ளிவாசல், சவளக்கடை அர்-ரகுமான் ஜூம்ஆப் பள்ளிவாசல், வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம் ஆகியவற்றிக்கு நிதி வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சவளக்கடை மத்தியக் குழு தலைவர் எம்.ஐ.எம்.அஸீஸ் தலைமையில் 5ம் கிராம அல்-ஹிக்மா பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

சாளம்பைக்கேணி பிரதேசத்தில் சாளம்பைக்கேணி-04 ஹைரியா ஜூம்ஆப் பள்ளிவாசல், சாளம்பைக்கேணி-04 ஹ_தா ஜூம்ஆப் பள்ளிவாசல், சாளம்பைக்கேணி-03 நூராணிய ஜூம்ஆப் பள்ளிவாசல், சாளம்பைக்கேணி 12ம் கிராh அஸ்-சிராஜ் மகா வித்தியலயம், சாளம்பைக்கேணி-03 சுகாதரா மத்திய  நிலையம் ஆகியவற்றிக்கு நிதி வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாளம்பைக்கேணி  மத்தியக் குழு தலைவர் எம்.எச்.மஹ்ரூப் தலைமையில் சாளம்பைக்கேணி ஸாஹிரா பாலர் பாடசாலையில்; நடைபெற்றது.

மத்திய முகாம் பிரதேசத்தில் ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயம், 5ம், 4ம் கிராம அல்-ஹிறா பாடசாலை, முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல்,  4ம் கிராம பலாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஆகியவற்றிக்கு நிதி வழங்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய முகாம்   மத்திய குழு தலைவர் ஏ.நளீம்  தலைமையில் மத்திய முகாம் நகரில்  நடைபெற்றது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்றோ நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் டுபாய் நாட்டின் அட்லான்டிக்கா நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபாருமான ஷெய்க் நாசிம் அஹம்மட், பிரதி அமைச்சரின் சர்வேதேச விவகாரங்களுக்கான செயலாளர் எம்.அலி ஜின்னா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சீ.எம்.நஸார், பள்ளிவாசல் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget