மீலாதுன் நபி தினத்தை
முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி கலாசார குழுவினர் ஒழுங்கு செய்த சிறப்பு
நிகழ்வு இன்று (03) கல்லூரி திறந்தவெளியரங்கில் கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது ஜும்ஆப்
பள்ளிவாசல் பேஸ் இமாம் அல்ஹாஜ் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவா சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு
நல்லுபதேசம் செய்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி
பிரதி அதிபர் ஏ.பி.எம்.முஜீன், உதவி அதிபர்களான எம்.எஸ்.அலிகான், எச்.எம்.அன்வர் அலி, எம்.எச்.எம்.அபுபக்கர் , எம்.எம்.நிஸார்தீன், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு அன்னதானமும் (கந்தூரி) வழங்கப்பட்டது.








Post a Comment