ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் வாழ்விலும் போதிய பயிற்சியும் இருக்குமாயின் அவர்
வாழ்வில் உயர்ச்சி நிலை அடைவது உறுதியாகும். இன்றைய நவீன உலகின் சவால்களுக்கு முகம்
கொடுக்கும் வகையில் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தம்மை
தயார் படுத்திக்கொள்ள வேண்டும்
என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.
ஓசியஸ் கெம்பஸில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது
லீ மரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இளைஞர் சேவை எம்.வை.ஹாறுன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது
தொடர்ந்தும் அவர்
உரையாற்றுகையில்…..
ஒருவர் வாழ்வில் உயர் நிலை அடையும் வகையில் பல்வேறான
முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பல பயிற்சிகளையும் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.
பயிற்சியும் முயற்சியும் ஒருங்கே சிறந்த முறையில் அமையுமாயின் அவர் வாழ்வின்
உயர்ந்த ஸ்தானத்தினைப் பெற்றுக்கொள்வது இலகுவான விடயமாகும்.
இன்றைய நவீன உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தம்மை தயார்
படுத்திக்கொள்ள வேண்டும். அவற்றுள் எமக்கான வருமானத்தினை ஈட்டும் வகையில் தொழிற் பயிற்சிகளையும்
பெற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. ஒருவர் பெற்றுக்கொள்ளும் வேண்டியது காலத்தின் தேவையாக
உள்ளது. ஒருவர் பெற்றுக்கொள்ளும் பயிற்சிக்காக வழங்கப்படும் சான்றிதழ்கள்
பலரின் வாழ்க்கையை உயர்
ஸ்தானத்திற்கு கொண்டு சென்றிருக்கின் றது.
கடந்த காலங்களில் பல்வேறு உயர் கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கு
கிராமப் புறங்களிலுள்ள இளைஞர்களுக்கு முடியாத காரியமாக இருந்தன. ஆனால் தற்போது பெரும்பாலான
கிராமப்புறங்களில் சர்வதேச தரத்திற்கு இணையான பயிற்சி நெறிகளை மேற்கொள்ளக்
கூடிய பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமது காலடியில் எளிதில்
கிடைக்கக் கூடிய வளங்களை பயன்படுத்திக்கொள்ள அனைத்து இளைஞர் யுவதிகளும் முயல வேண்டும் என்றார்.

Post a Comment