Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனையில் பெண் வங்கி உத்தியோகத்தர் வங்கியில் வைத்து வெட்டிக் கொலை (படங்கள்)

கல்முனை நகரில் அமைந்துள்ள சர்வோதய வங்கிக் கிளையில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர் ஒருவர் இன்று(27) பி.ப. 2.30 மணியளவில் இனம் தெரியாதோரினால் வெட்டிக் கொலை செய்யப்பட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நட்பட்டிமுனையை சேர்ந்த ராஜேந்திரன் சுலக்ஷ்னா எனும் 30 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை கல்முனைப் பொலிசார் மேற்கொண்டு வருவதோடு, பொலீஸ் விஷேட குற்றப்புலனாய்வு பிரிவினரும் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளனர்.

பெருமளவான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குழுமியிருப்பதனால் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிசார் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget