Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை “ஏ” தர வைத்தியசாலையாக தரமுயர்த்தப் பட்டது!

-எம்.வை. அமீர்-
கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியம் 16.02.2016 ஆம் திகதி  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர் செயலகத்தில் கூடியது. அப்போது கிழக்கு மாகாண அபிவிருத்திகள் இவ்வருட ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் முன் மொழிந்த கோரிக்கைகளும் அமைச்சர் வாரியத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் இருந்த சில வைத்திய சாலைகளை தரமுயர்த்த அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள  
அன்னமலை ஆரம்ப வைத்தியப்பிரிவை சீதரத்துக்கும்,
மத்திய முகாமின் சீதரத்தில் இருந்த வைத்திய சலையை பிதரத்திற்கும்,
இறக்காமம் சிதரத்திலான வைத்தியசாலையை தரத்திற்கும்,
 ஆலங்குளம் ஆரம்ப சுகாதார வைத்திய பிரிவை சிதரத்திற்கும்,
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை தரவைத்தியசாலையாகவும்,
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள 
சந்திவெளி சிதரத்திலான வைத்தியசாலையை பிதரத்திற்கும்
மையிலடித்தீவுசிதர வைத்தியசாலையை தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் குறிப்பிடுகையில் திருகோணமலை மாவட்டத்தின் கஷ்டப் பிரதேஷமாக விளங்கும் இறக்கக்கண்டியில் மத்திய மருந்தகம் புதிதாக அமைக்கவும் அமைச்சரவை வாரியம் முழு அனுமதி வழங்கியுள்ளதாகவும்,அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரிப் தலைமையில், ஒரே நாடு பெரும் சக்திஎனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வும், புனர் நிர்மாணம் செய்யப்பட வெளி நோயாளர் பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், சாய்ந்தமருது பள்ளிவாசல் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன முன்வைத்துள்ள தரமுயர்த்தல் சம்மந்தமான கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget