Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

அருகிவரும் மூலிகைகளைப் பாதுகாக்க புதிதாக ஆயுர்வேத மூலிகைத் தோட்டம்



-பழுலுல்லாஹ் பர்ஹான்-


இலங்கையின்
68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச
செயலகத்தில் புதிதாக ஆயுர்வேத மூலிகைத் தோட்டம் ஒன்று ஆரம்பித்து
வைக்கப்பட்டுள்ளது.





மேற்படி ஆயுர்வேத மூலிகைத்
தோட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 04  நேற்று வியாழக்கிழமை மண்முனை
வடக்கு பிரதேச செயலக  கிராம சேவையாளர்கள்  நலன்புரி சங்கத் தலைவர்  எஸ்
.தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது.





இதன் போது இவ் ஆயுர்வேத மூலிகைத் தோட்டத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.தவராஜா ஆரம்பித்து வைத்தார்.





இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





குறித்த ஆயுர்வேத மூலிகைத் தோட்டத்தில் அருகிவரும் மூலிகை மரங்களான சித்தரத்தை, திப்பிலி, சதைகரைச்சான், செங்கோட்டம், ஆடாதோடை போன்றவை நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 


 


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget