Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்! (படங்கள்)


தாய்வான், நாட்டின் தென்பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில்
சிக்கி 10 மாத குழந்தை உள்பட மூவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள்
வெளியாகியுள்ளன. இன் நிலா நடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.



இதுபோன்ற இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தாய்வானில் இன்று
அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக
பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

தாய்வானில் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங் நகரில் இருந்து சுமார் 39
கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட
இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 16 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி
குடியிருப்பு உட்பட நான்கு கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாகவும்,
இடிபாடுகளில் சிக்கிய 10 மாத குழந்தை உள்பட மூவர் பலியானதாக முதல்கட்ட
தகவல்கள் வெளியாகியுள்ளன.



அருகாமையில் உள்ள இன்னொரு 7 மாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த சுமார் 200
பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் காயமடைந்த நூற்றுக்கும்
அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பேரிடர்
மீட்புக் குழுவினர், தொடர்ந்து அங்கே இடிபாடுகளை அகற்றும் பணியிலும்,
மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1999 ஆம் ஆண்டு தாய்வானை தாக்கிய 7.6 ரிக்டர் அளவிலான
நிலநடுக்கத்துக்கு சுமார் 2400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget