Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NFGG யின் சுதந்திர தின நிகழ்வு கத்தன்குடியில்..





இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையொட்டி நல்லாட்சிக்கான தேசிய முனன்ணி (NFGG) யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்வு இன்று (04) காத்தான்குடியில் நடைபெற்றது.







இந்நிகழ்வு NFGG யின் கிழக்குப் பிராந்திய காரியாலய வளாகத்தில் காலை 9.30 க்கு ஆரம்பமானது.





இந்த நிகழ்வின் முதல் அம்சமாக NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களினால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் NFGG யின் பிராந்திய சபையின் செயலாளர் MACM ஜவாஹிர் அவர்களின் தலைமையில் நடைபெற்றன.  





இதில் NFGG யின் பொதுச்செயலாளர் M.R அஷ்செய்க் நஜா முஹம்மட் அவர்களும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களும் விசேட உரைகளை ஆற்றினர்.





மேலும்இந்நிகழ்வில் NFGGயின் காத்தான்குடி பிராந்திய சபையின் சிரேஸ்ட உறுப்பினர்களான முன்னாள் நகர சபை உறுப்பினர்களான AGM ஹாறூன், MAHM.. மிஹ்ழார், MHA முகம்மட் நஸீர்,ஆகியோரும் MM. அமீரலி ஆசிரியர், SHM பிர்தௌஸ், MM.முகம்மது ஜனூப், SMM பஸீர் ஆசிரியர் ,ஆகியோர் உள்ளிட்ட NFGG யின் ஏராளமான செயற்குழு உறுப்பினர்களும் பெண்கள் அணிப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.





 


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget