மேற்கிந்தி தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல்.
ஐ.பி.எல். போட்டியில் இவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். கிறிஸ்
கெய்ல் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் தீவிர இரசிகர் ஆவார்.
இந்தியா வரும்போது எல்லாம் அவரது படங்களை விரும்பி பார்ப்பார்.
இந்தநிலையில் தனது கையெழுத்திட்ட துடுப்பு ஒன்றை அமிதாப்பச்சனுக்கு கிறிஸ் கெய்ல் பரிசாக அளித்துள்ளார். இதுபற்றி கெய்ல் டுவிட்டரில் கூறும்போது ‘‘அமிதாப்பச்சனுக்கு எனது ஸ்பார்டன் கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்ததில் பெருமை அடைகிறேன். அவரது படங்கள், ஸ்டைல் என அனைத்தும் பிடிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அமிதாப்பச்சன் பதில் அளிக்கும்போது ‘‘கெய்ல் என்ன ஒரு மரியாதை. என்னை பற்றி உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் உங்களின் தீவிர ரசிகர்கள்’’ என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Post a Comment