Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

T20 Asia Cup: ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தை சுருட்டிப்போட்ட வங்கதேசம்!

ஆசிய கிண்ணம் டி20 போட்டியின் 3வது ஆட்டத்தில் வங்க தேச பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தால் ஐக்கிய அரபு அமீரக அணி சுருண்டது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் தொடங்கியது.

மூன்றாம் நாளான இன்று வங்கதேசம் மற்றும் ஐக்கிர அரபு அமீரகம் மோதும் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற அமீரகம் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி வங்கதேசத்தில் மொகமது மித்துன் மற்றும் சவும்யா சர்கார் துவக்கி வீரர்களாக களமிறங்கினர்.

20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்களை எடுத்தது வங்க தேசம். இதனையடுத்து எட்டக்கூடிய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் அணி 17.4 ஓவரில் 82 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஐக்கிய அமீரகம் சார்பில் ரோஹன் முஸ்தபா 18 ஓட்டங்களும், அதிகபட்சமாக உஸ்மான் 30 ஓட்டங்களும் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 51 ஓட்டங்களுக்கு தோல்வியடைந்தது. வங்கதேச அணி சார்பில் முஸ்தபிசூர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன் மற்றும் மொர்தாசா ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget