Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | மலேசிய அபிவிருத்தி நுணுக்கங்களை பகிர்ந்துகொள்ளும் மு.கா. குழு!

-எம்.வை.அமீர், எம்.ரீ.ஹைதர் அலி-
 குறுகிய காலத்துக்குள் அபிவிருத்தியடைந்துள்ள மலேசியாவின் அபிவிருத்தி நுணுக்கங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழுவினர் அவர்களது பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக அந்நாட்டின் தேசிய ஒருங்கிணைப்புக்கான அமைச்சர் தான் சிறி தாதுக் சேரி ஜோஷப் குருப் அவர்களை பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில்  சந்தித்ததுடன், மலேசியயாவின் தேசிய ஒருன்கினைப்பு தொடர்பான  பொறிமுறைகள் பற்றிகலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சின் நிறைவேற்று பணிப்பாளர் ஜாந்திசன் லட்சுமணன், உட்பட UMNO  கட்சியின் பிரதிநிதிகளும்  கலந்துகொண்டனர் .

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இந்நிகழ்வில் மாகா சபை உறுப்பினர்களான  ஆரிப்  சம்சுதீன், சிப்லி பாரூக், ரிஸ்வி ஜவகர்ஷா மற்றும் ஷிபான் மஹருப், இப்ரா லெப்பை சாஹிர் உட்பட  முகாவின் ஏனைய தூ துக்குழு  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இப்பயணத்தின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தூதுக்குழுவினர் பல்வேறுபட்ட பயிற்சி மற்றும் களப் பயணங்களிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget