கண்டி
கலகெதரயை சேர்ந்த கல்முனை ஸாஹிரா கல்லூரி பழைய மாணவரும், இலங்கை கடற்படை முன்னாள் அதிகாரியும், தற்போது மலேசியாவில், ஐக்கிய நாடுகள் அமைப்பின்
மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் பிராந்தியததிற்கான நிரந்தர
பிரதிநிதியாகக் கடமையாற்றும் இர்ஷாட் அஸீஸ் 2016.03.10ம் திகதிமுதல் மலேசியாவின் அவசர
நிலமைகளை எதிர்கொள்ளும் அதிரடிப்படையின் 3ம் நிலை உயர் பதவியான மார்ஷல்
பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.குறித்த பதவியானது மலேசிய வரலாற்றில் பிறநாட்டவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இப்பதவியானது இரானுவத்தின் லுத்தினன் ஜெனரால், விமானப்படையின் Vice Marshal பதவிக்கு நிகரானதாகும்.
குறித்த பதவியின் கடமைகளாக மலேசிய வௌிவிவகாரங்களுக்கான மார்ஷலாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைகளுக்கும், திடீர் அனர்த்த முகாமைக்கு பொறுப்பாகவ செயற்படுவதாகவும் காணப்படுகின்றது.
அதே சமயம் இர்ஷாட் அஸீஸ் அவர்கள் இந்தோனேசியாவின் சிறந்த பிரஜைக்காக இந்தோனேசிய அரச குடும்பத்தினால் வழங்கப்படும் உயர் கௌரவ விருதான Dato Seri Paduka Di Raja என்ற விருதும் வழங்கி அரச குடும்பத்தினால் கௌரவிக்கப்பட்டார்.
இர்ஷாட் அஸீஸ் அவர்கள் ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளரான ஜனாப் அஸீஸ் அவர்களின் புதல்வராவார். இவரின் இந்நியமனமானது இலங்கைக்கும், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.






Post a Comment