-ஏ.பி.எம்.அஸ்ஹார்-நிலையான எதிர்காலத்துக்கு வலுவான பெண்கள்' எனும் தொனிப்பொருளில் அமைந்த சர்வதேச மகளிர்தின பிரதான பிரதான நிகழ்வுகள் இன்று (8) அம்பாறை எச்.எம். வீரசிங்க மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவு செய்யப்பட்ட பெண்கள் சிலருக்கு வீடமைப்புக்கான உதவித்தொகைக்குரிய ஆவனங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டாரவும் இங்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டாார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே, தலதா அதுகோரல , பெற்றோலிய வளத்துறைபிரதியமைச்சர் அனோமா கமகே, முன்னாள் அமைச்சர் ரேனுகா ஹேரத், பாராளுமன்ற உறுப்பினரான ஹிருனிகா பிரேமச்சந்திர உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பொ்ணாண்டோ உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






Post a Comment