சவளக்கடை
வீராத்திடல் அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நௌபீர்
ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் 15ஆம்
கொளனி நட்ச்சத்திரா விளையாடடுக் கழகம் சம்பியனாக தெரிவானது.
நாணயச்
சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய 15ஆம் கொளனி
நட்ச்சத்திரா விளையாடடுக் கழகம் 8ஒவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 107
ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 11ஆம் கொளனி
சென்றல் விளையாட்டுக்கழகம் 8ஒவர்கள் நிறைவில்7 விக்கட்டுக்களை இழந்து 40
ஓட்டங்களை மாத்திரம் பெற்று தேல்வியை தாழுவியது.
இந்நிகழ்வு
வீராத்திடல் அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகர் எம்.எல்.அஸீஸ்
தலைமையில் 5ஆம் கொளனி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று
நடைபெற்ற நிகழ்வுக்கு சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி
ஏ.எம்.எம்.நஜீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நௌபீர் ஞாபகார்த்த
வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வுக்கு
கௌரவ அதிதிகளாக கல்முனை போக்குவரத்து சாலையின் பரிசோதகர்களான
ஏ.எஸ்.இஸ்ஹாக், ஏ.எஸ்.பாயிஸ், வீரத்திடல் நஸீர் ஸ்டோர் உரிமையாளர்
ஏ.எம்.நஸீர், நௌபீர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண முகாமையார் ஏ.எம்.நஸாத்,
வீராத்திடல் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஹமீம், உப தலைவர் ஏ.ஏல்.அலி
அக்பர், அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் நாவிதன்வெளி இளைஞர்
சம்மேளனத்தின் உப தலைவருமான எம்.ஐ.எம்.நிஜாம், விளையாட்டுக் கழங்களின்
பிரதிநிகள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






Post a Comment