ஜப்பான் நாட்டின் புகுவோகா நகரில் யோகோபோடியா அமைப்பால் வழங்கப்படும், புகுவோகா விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்படவுள்ளது.2016 ஆம் ஆண்டிற்கான இந்த விருது, ரஹ்மானுக்கு வழங்கப்படுகின்றது.
இசைத்துறையில் சிறந்து விளங்குவதற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஆசிய கலாசாரத்தை உருவாக்குபவர்கள் அல்லது பாதுகாப்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இசையுலகில் ரஹ்மான் செய்த சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதில் கிராண்ட், அகடமிக், கலை மற்றும் கலாசாரம் என்ற 3 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை http://fukuoka-prize.org இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.
கிராண்ட் பிரிவில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன் இந்த விருதை சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர், நடன கலைஞர் பத்மா சுப்ரமணியம், வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாபார், சரத் மஸ்திரோ கலைஞர் அஜ்மத் அலி கான், சமூக மற்றும் கலாசாரத்துறையில் ஆசிஸ் நந்தி, அரசியல் அறிவியல், வரலாற்று துறை அறிஞர் பார்த்தா சாட்டர்ஜி, சுற்றுச்சூழல் ஆய்வாளர் வந்தன ஷிவா, ஓவியக்கலைஞர் நளினி மாலினி, வரலாற்று, சமூக ஆய்வாளர் ராமச்சந்திரா குகா ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

Post a Comment