-அஸ்ஹர் இப்றாஹிம்-
”கப்றுக சிப்நென” திட்டத்தின் கீழ் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில்
தரம் 6 இல் கல்வி பயிலும் 230 மாணவர்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகளை
வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(30) கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன்
தலைமையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
எமது நாட்டில்
எதிர்காலத்தில் தெங்கு உற்பத்திப் பொருட்களுக்கு தட்டுப்பாட ஏற்படாத
வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தென்னை மரங்களை தமது வீடுகளில் நடும்
திட்டத்தினை ஊக்குவித்து அதனை முன்னெடுத்துச் மூலம் சிறந்த பயனை பெற
முடியும் என
தெங்கு அபிவிருத்தி சபையின் அபிவிருத்தி உத்தியோஸ்தர் செல்வி .என்.டீ.நிஸாதி சந்திரேகா தெரிவித்தார்.
தெங்கு அபிவிருத்தி சபையின் அபிவிருத்தி உத்தியோஸ்தர் செல்வி .என்.டீ.நிஸாதி சந்திரேகா தெரிவித்தார்.
அதன்படி தற்போது பாடசாலைகளில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கப்படும் போது மாணவர்கள் தரம் 10 இல் கல்வி பயிலும் போது தென்னை மரத்திலிருந்து பிரயோசனத்தைப் பெற முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
தெங்கு அபிவிருத்தி சபையின் அபிவிருத்தி உத்தியோஸ்தர் ஐ.எல்.சனீர் , ஆகியோருடன் சாய்ந்தமருது பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோஸ்தர்களும் கல்லூரி பிரதி அதிபர்களான எம்.எஸ்.முஹம்மட் , ஏ.பி.முஜீன் , சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு தென்னை மரமொன்றினை கல்லூரி வளாகத்தினுள் நாட்டி வைத்ததுடன் மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் வினியோகிக்கப்பட்டன.
இந் நிகழ்வு அம்பாறை தெங்கு அபிவிருத்தி சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.





Post a Comment