கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் எந்தவொரு
நிகழ்வுகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், முப்படை முகாம்களுக்குள்
நசீர் அஹமட் அனுமதிக்கப்பட கூடாது எனவும் மேற்கொண்ட தீர்மானத்தை நீக்கிக்
கொள்ள முப்படையினர் தீர்மானித்துள்ளனர்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் திருகோணமலை - சம்பூர் பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வின் போது, நசீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரை கடுமையான சொற்களால் திட்டினார்.
இது குறித்த காணொளி சமூக இணையத்தளங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களிலும் வௌியானதை அடுத்தும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இந்தநிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் தாம் பங்கேற்கப் போவதில்லை எனவும், முப்படை முகாம்களுக்குள் நசீர் அஹமட் அனுமதிக்கப்பட கூடாது எனவும், முப்படையினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் குறித்த தீர்மானம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment